‘நடப்பு ரஞ்சி சீசன் தான் கடைசி’ - ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் சாஹா

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை சீசன் தான் அவர் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர். 

Nov 11, 2024 - 16:12
 0  4
‘நடப்பு ரஞ்சி சீசன் தான் கடைசி’ - ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் சாஹா

புதுடெல்லி: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை சீசன் தான் அவர் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர்.

கடந்த 2010-ல் இந்திய அணியில் அவர் அறிமுகமானார். மொத்தம் 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு அவர் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow