தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது பெல்ஜியம் நீதிமன்றம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,300 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை பெல்ஜியம் நீதிமன்றம் நிராகரித்தது.

Aug 31, 2025 - 07:50
 0  3
தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது பெல்ஜியம் நீதிமன்றம்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,300 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை பெல்ஜியம் நீதிமன்றம் நிராகரித்தது.

மும்பையில் நகை வியாபாரம் செய்த கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெகுல் சோக்‌ஷி (66). இவரும் இவரது உறவினர் நீரவ் மோடியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் நிதி மோசடி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதால், மெகுல் சோக்‌ஷி பெல்ஜியத்தில் வீட்டுக் காவலிலும், நீரவ் மோடி லண்டன் சிறையிலும் உள்ளனர். இவர்கள் வழக்குகளை சந்திப்பதற்காக இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ வேண்டுகோள் விடுத்தது. இதை எதிர்த்து மெகுல் சோக்‌ஷி பெல்ஜியம் கசேஷன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், பெல்ஜியத்தில் உள்ள மேல்முறையீடு நீதிமன்றத்தில் மனு செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow