தேசத் துரோக வழக்கில் சின்மயி கிருஷ்ண தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமீன்
வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சின்மயி கிருஷ்ண தாஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

டாக்கா: வங்கதேசத்தில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சின்மயி கிருஷ்ண தாஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகரும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான சின்மயி கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
What's Your Reaction?