தெற்கு ரயில்வே 17 நாட்களில் 85 சரக்கு ரயில்களை இயக்கி சாதனை

அந்த வகையில், தமிழ்​நாடு சிவில் சப்​ளைஸ் கார்ப்​பரேஷனின் கோரிக்​கைகளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே தமிழகத்​தின், டெல்டா மாவட்​டங்​களுக்கு நேரடி கொள்​முதல் மையங்​கள் வாயி​லாக கொள்​முதல் செய்​யப்​படும் நெல்லை எடுத்து வர சரக்கு ரயிலை இயக்​கியது.

Oct 20, 2025 - 10:10
 0  2
தெற்கு ரயில்வே 17 நாட்களில் 85 சரக்கு ரயில்களை இயக்கி சாதனை

சென்னை: சரக்​கு​களை கையாளும் நிறு​வனங்​களை, ஊக்​கப்​படுத்த தெற்கு ரயில்வே சலுகைகள் அளித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்​நாடு சிவில் சப்​ளைஸ் கார்ப்​பரேஷனின் கோரிக்​கைகளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே தமிழகத்​தின், டெல்டா மாவட்​டங்​களுக்கு நேரடி கொள்​முதல் மையங்​கள் வாயி​லாக கொள்​முதல் செய்​யப்​படும் நெல்லை எடுத்து வர சரக்கு ரயிலை இயக்​கியது.

தஞ்​சை, நாகப்​பட்​டினம், நீடா​மங்​கலம், கும்​பகோணம், சீர்​காழி, மயி​லாடு​துறை, பேரளம், மன்​னார்​குடி, திருத்​துறைப்​பூண்​டி, திரு​வாரூர், பட்​டுக்​கோட்​டை, விருத்​தாச்​சலம், செங்​கை, புதுக்​கோட்டை ஆகிய இடங்​களில் உள்ள கூட்ஸ் ஷெட்​டு​களில் சரக்கு ரயில்கள் இயக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகம் முழு​வதும் அக்​.1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 85 ரயில்​கள் இயக்​கப்​பட்​டு, 2.3 லட்​சம் டன் சரக்​கு​கள் கையாளப்​பட்​டுள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow