தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Apr 30, 2025 - 17:20
 0  3
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அதன் நிர்வாகிகள் ஜூன் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow