தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்து 179 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?
தென்கொரியாவின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. அதன் பின்பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

சியோல்: தென்கொரியாவின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. அதன் பின்பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தென்கொரியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ஜேஜு ஏர் கோ நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று அதிகாலை தென்கொரியாவின் முவான் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 175 பயணிகள், விமானிகள் உட்பட 6 ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் இருந்தனர்.
What's Your Reaction?