துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.30 - நவ.5

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.30 - நவ.5

Oct 30, 2025 - 16:15
 0  7
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.30 - நவ.5

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன்(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் ஒரு வருடத்திற்கு பிறகு வருகிறார். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow