தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்

தீ​பாவளி பண்​டிகை இன்று நாடு​முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. புத்​தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடு​தோறும் தீபம் ஏற்றி வைத்து பண்​டிகையை மக்​கள் கொண்​டாடினர்.

Oct 20, 2025 - 08:25
 0  2
தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்

சென்னை: தீ​பாவளி பண்​டிகை இன்று நாடு​முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. புத்​தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடு​தோறும் தீபம் ஏற்றி வைத்து பண்​டிகையை மக்​கள் கொண்​டாடினர். இதை முன்​னிட்டு சென்​னை​யில் ஜவுளி, பட்​டாசு மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​களின் விற்​பனை அமோக​மாக நடந்​தது.

தீபாவளி பண்​டிகை என்​றாலே, துணிக்​கடைகள் அதி​கம் உள்ள சென்​னை​யின் முக்​கிய கடை வீதி​களில் கூட்ட நெரிசல் இயல்​பாகவே அதி​கரித்து விடும். அந்​தவகை​யில், தீபாவளிக்கு முந்​தைய நாளான நேற்​று, சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள ஜவுளி கடைகளில் காலை முதலே மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலை​யிலும், நேற்று விடு​முறை நாள் என்​ப​தால் மக்​கள் தங்​களது குடும்​பத்​தினருடன் ஜவுளி கடைகள், பட்​டாசு கடைகளை நோக்கி படையெடுத்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow