“திரைப்படத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு” - ஆர்.ஜே. பாலாஜி

 “ஒரு படம் வந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். படத்தின் கன்டென்ட் சிறப்பாக இருந்தால் மக்களிடையே சென்று சேரும். அதை யாராலும் தடுக்க முடியாது” என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Nov 23, 2024 - 16:15
 0  3
“திரைப்படத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு” - ஆர்.ஜே. பாலாஜி

சென்னை: “ஒரு படம் வந்தால் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். படத்தின் கன்டென்ட் சிறப்பாக இருந்தால் மக்களிடையே சென்று சேரும். அதை யாராலும் தடுக்க முடியாது” என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “இந்த இளம் படக்குழுவுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. படப்பிடிப்பு ரசித்து பார்த்தேன். நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. அதற்கு காரணம், படக்குழு மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை. செல்வராகவனுடன் பணியாற்றியது புதிய அனுபவம். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படம் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்த்தவர்கள் பிடித்திருந்ததாக தெரிவித்தனர். கன்டென்ட் சிறப்பாக இருந்தால் படம் மக்களிடையே கண்டிப்பாக சென்றடையும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow