திரைத் துறையில் இருந்து விலகுவதாக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி அறிவிப்பு 

‘12த் ஃபெயில்’ படத்தின் மூலம் பரலவான கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திரைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தான் திரைத்துறையில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

Dec 2, 2024 - 21:20
 0  4
திரைத் துறையில் இருந்து விலகுவதாக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி அறிவிப்பு 

மும்பை: ‘12த் ஃபெயில்’ படத்தின் மூலம் பரலவான கவனத்தை ஈர்த்த பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திரைத் துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தான் திரைத் துறையில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ”கடந்த சில ஆண்டுகள் எனக்கு சிறப்பானவையாக அமைந்தன. உங்களின் ஆதரவுக்கு எனது நன்றிகள். ஆனால் நான் முன்னோக்கி நகரும் இந்த முடிவை, மறுபரிசீலனை செய்து ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக, நடிகனாக, மீண்டும் குடும்பத்தை நோக்கி திரும்ப நினைக்கிறேன். எனவே வரும் 2025-ல் ஆண்டில் நாம் அனைவரும் கடைசியாக ஒருமுறை ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வோம். கடைசி 2 படங்கள் பல்வேறு நினைவுகளை கொடுத்துச் சென்றன. அனைவருக்கும் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow