திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திரமகா தேசிகன் நினைவாக ஆண்டு தோறும், உற்சவ விழா கொண்டாடப்படும்.

சென்னை: திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திரமகா தேசிகன் நினைவாக ஆண்டு தோறும், உற்சவ விழா கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகன் உற்சவம் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு உற்சவத்தில் புதிதாக திருத்தேர் ஏற்பாடு செய்யப்பட்டு முதல்முறையாக தேரோட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில், அஹோபில மடத்தின் 46-வது பட்டத்து அழகிய சிங்கர் ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
What's Your Reaction?