திருப்பதி பிரம்மோற்சவம் 4-ம் நாள் விழா: கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபால வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Sep 28, 2025 - 07:15
 0  5
திருப்பதி பிரம்மோற்சவம் 4-ம் நாள் விழா: கற்பகவிருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும் இரவு சர்வபூபால வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதையடுத்து தங்க கொடிமரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow