திருப்பங்கள்... மேஷம் ராசிக்கான பிப்ரவரி மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான பிப்ரவரி மாத பலன்கள்: நீங்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் வாங்குபவர்கள். இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்தில் வக்ர நிலையில் இருந்தாலும் குரு சாரம் பெற்றிருப்பதால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
What's Your Reaction?