திருக்குணகிரி மலையில் சிதைந்து வரும் சமண சிற்பங்கள் - மீட்டெடுக்குமா தொல்லியல் துறை?

மலைப்படுகையில் சமணர்கள் தங்கி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் புடைப்புச் சிற்பங்களையும், வட்டெழுத்தில் பல்வேறு தகவல்களை கல்வெட்டுகளாகவும் பொறித்தனர்.

Mar 14, 2025 - 17:25
 0  3
திருக்குணகிரி மலையில் சிதைந்து வரும் சமண சிற்பங்கள் - மீட்டெடுக்குமா தொல்லியல் துறை?

தேனி: சமண மதம் வடமாநிலங்களில் உருவானாலும், தமிழ் மன்னர்களின் ஆதரவினால் தென்பகுதியிலும் பரவியது. பிறஉயிருக்கு தீங்கு இழைக்காமை, பற்றற்ற துறவற வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு கோட்பாடுகளை கொண்டிருந்ததால் பலரும் இதனைப் பின்பற்றத் தொடங்கினர். மலைப்படுகையில் சமணர்கள் தங்கி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் புடைப்புச் சிற்பங்களையும், வட்டெழுத்தில் பல்வேறு தகவல்களை கல்வெட்டுகளாகவும் பொறித்தனர்.

மூலிகைகள் அரைக்க சமணர்கள் பயன்படுத்திய குழி.

கழுகுமலை, மதுரை சமணர் மலை, யானைமலை, கீழவளவு, சித்தன்னவாசல், எண்ணாயிரம், கும்பகோணம், திருவண்ணாமலை-சீய மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சமணர் படுகைகளும், கல்வெட்டுகளும் அதிகம் உள்ளன. தேனி மாவட்டத்தைப் பொருத்தளவில் உத்தமபாளையம்-கோம்பை சாலை திருக்குணகிரி மலையில் சமணச் சின்னங்கள் அதிகம் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow