திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Mar 30, 2025 - 02:05
 0  3
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்க முறைப்படியே சனிப் பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026 மார்ச் மாதம் இக்கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow