“திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல” - நடிகர் பார்த்திபன்

“தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு” என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்தார்.

Nov 26, 2024 - 18:20
 0  5
“திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல” - நடிகர் பார்த்திபன்

புதுச்சேரி: “தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு” என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் இன்று (நவ.26) சந்தித்துப் பேசினார். அப்போது அவர் புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். புதுச்சேரி சுற்றுலா மேம்பாடு குறித்த படத்தை புதுச்சேரி அரசு தயாரித்தால் தான் இயக்கத் தயார் எனவும் முதல்வரிடம் கூறினார். அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தற்போது தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow