‘தவறு மேல் தவறு’ - அமெரிக்காவின் 50% வரி எச்சரிக்கைக்கு சீனா எதிர்வினை!
அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
What's Your Reaction?