தற்காப்பு கலைகள் கற்றுவரும் லோகேஷ் கனகராஜ்!

நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. 

Jun 14, 2025 - 20:45
 0  4
தற்காப்பு கலைகள் கற்றுவரும் லோகேஷ் கனகராஜ்!

நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை கவனித்துக் கொண்டே தாய்லாந்தில் தனது அடுத்த படத்துக்காக எழுதி வருகிறார் லோகேஷ் கனகராஜ் என செய்திகள் வெளியாகின.

ஆனால், தான் நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதனை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டே, ‘கூலி’ படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் கவனித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow