தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025-க்கான இணையதள முன்பதிவு (online registration) செய்திட ஆக., 20 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது  என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். 

Aug 16, 2025 - 16:50
 0  4
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025-க்கான இணையதள முன்பதிவு (online registration) செய்திட ஆக.20 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 - 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டு போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow