தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று (31-ம் தேதி) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

May 31, 2025 - 09:10
 0  2
தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று (31-ம் தேதி) காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் பாலசுப்பிரமணியன் இந்தத் தேர்தலுக்கு பொறுப்பாளராக உள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில் இம்முறை தலைவர் பதவிக்கு சுரேஷ் மனோகர் (மதுரை மாவட்டம்) போட்டியிடுகிறார். அவரது அணியில் பொருளாளர் பதவிக்கு சிவானந்தம் (தஞ்சாவூர் மாவட்டம்), துணைத் தலைவர் பதவிக்கு ரவிக்குமார் (திருவள்ளூர் மாவட்டம்), ராபர்ட் குமார் (காஞ்சிபுரம் மாவட்டம்), ஆனந்த் (சிவகங்கை மாவட்டம்), ராதா (கடலூர் மாவட்டம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow