“தமிழ் மொழிக்காக ஒரு பெருமைச் சின்னம்” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். 

Apr 15, 2025 - 09:00
 0  5
“தமிழ் மொழிக்காக ஒரு பெருமைச் சின்னம்” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

சென்னை: தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow