‘தமிழ் தீ பரவட்டும்’ - கவனம் ஈர்க்கும் ‘பராசக்தி’ புதிய போஸ்டர்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. அதில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமாக வீசியெறியும் துண்டுப் பிரசுரங்களில் ‘‘தமிழ் தீ பரவட்டும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இது அவரது 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
What's Your Reaction?