தமிழில் அறிமுகம் ஆகிறார் ‘கோர்ட்’ நாயகி!

'கோர்ட்’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோர்ட்’. இதில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Jul 8, 2025 - 21:50
 0  4
தமிழில் அறிமுகம் ஆகிறார் ‘கோர்ட்’ நாயகி!

‘கோர்ட்’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோர்ட்’. இதில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டியிருந்தார்கள். தற்போது இவர் தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கே.ஜே.ஆர் நாயகனாக நடிக்கவுள்ளார். இதனை 'விலங்கு' வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தான் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஸ்ரீதேவி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow