தனுஷ் படத்தின் கதைப் பின்னணி: ராஜ்குமார் பெரியசாமி தகவல்

தனுஷ் படத்தின் கதைப் பின்னணி எப்படியிருக்கும் என்பதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Dec 24, 2024 - 17:10
 0  2
தனுஷ் படத்தின் கதைப் பின்னணி: ராஜ்குமார் பெரியசாமி தகவல்

தனுஷ் படத்தின் கதைப் பின்னணி எப்படியிருக்கும் என்பதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ‘அமரன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

தனுஷ் படத்தின் கதைக்களம் குறித்து கூறும்போது, “அமரன்’ திரைப்படம் துணிச்சலுக்கான விருது வென்ற ஒரு உண்மையான ஹீரோவை பற்றியதாக இருந்தது. டி55 திரைப்படம், நமக்கு தெரியாத, சமூகத்தில் கலந்து வாழும் பேசப்படாத பல ஹீரோக்களை பற்றியது” என்று தெரிவித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow