“தனிப்பட்ட அவதூறு கூடாது!” - ‘கங்குவா’ விவகாரத்தில் சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சிலர் நடிகர் சூர்யா குறித்தும், சிறுத்தை சிவா குறித்தும் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

Nov 18, 2024 - 20:45
 0  4
“தனிப்பட்ட அவதூறு கூடாது!” - ‘கங்குவா’ விவகாரத்தில் சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சிலர் நடிகர் சூர்யா குறித்தும், சிறுத்தை சிவா குறித்தும் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இயக்குநர் இரா.சரவணன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக்கூடும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow