தங்கம் விலை ரூ.200 உயர்வு: ஒரு பவுன் ரூ.71,360-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனை ஆகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனை ஆகிறது. நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
What's Your Reaction?