தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது

தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. அதேபோல் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Oct 8, 2025 - 11:50
 0  7
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் (அக்.6) பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow