தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு விற்பனையாகிறது.

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.11) பவுனுக்கு ரூ.440 குறைந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.57,760-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.
What's Your Reaction?