“ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை” - ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை!

‘கண்ணப்பா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அப்படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jun 25, 2025 - 22:45
 0  4
“ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை” - ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை!

சென்னை: ‘கண்ணப்பா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அப்படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்‌ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன் 27-ம் தேதி வெளியிடுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow