ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்றத்தின் தடை இடைநிறுத்தம்!

உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்தது.

May 30, 2025 - 09:05
 0  3
ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மீதான வர்த்தக நீதிமன்றத்தின் தடை இடைநிறுத்தம்!

வாஷிங்டன்: உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்தது. அதை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம்.

சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் என உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வரி உயர்வை ட்ரம்ப் அறிவித்தார். அவரது இந்த வரி விதிப்பு கொள்கை ரீதியான முடிவு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அமெரிக்காவில் உள்நாட்டிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இது சட்டவிரோதமானது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow