ட்ரம்ப் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ஜெலென்ஸ்கி

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Nov 16, 2024 - 10:25
 0  5
ட்ரம்ப் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ஜெலென்ஸ்கி

கீவ்: டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய ஊடகமான Suspilne க்கு அளித்த பேட்டியில், “டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும். இப்போது வெள்ளை மாளிகையை வழிநடத்தும் புதிய அணியின் கொள்கைகளே இதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயம் இது நடக்கும். ஏனெனில், இது அவர்களின் அணுகுமுறை, அவர்களின் குடிமக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதி.” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow