ட்ரம்ப் 2.0 காலத்தில் எப்படி இருக்கும் இந்திய - அமெரிக்க உறவு? - ஒரு பார்வை

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு விரிவடையும் என்றாலும், இறக்குமதி, வரிகள் மற்றும் குடியேற்றம் போன்ற சில விவகாரங்களில் அமைதியின்மை இருக்கலாம்

Nov 11, 2024 - 15:45
 0  4
ட்ரம்ப் 2.0 காலத்தில் எப்படி இருக்கும் இந்திய - அமெரிக்க உறவு? - ஒரு பார்வை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு விரிவடையும் என்றாலும், இறக்குமதி, வரிகள் மற்றும் குடியேற்றம் போன்ற சில விவகாரங்களில் அமைதியின்மை இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். மோடி, ட்ரம்ப் இடையே ஆழமான நட்பு இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையேயான கடினமான விவகாரங்களும் சுமுகமாக தீர்க்கப்படும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, டொனால்டு ட்ரம்ப், “வெளிநாட்டுப் பொருள்களுக்கு, குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக கட்டணங்கள் விதிக்கப்படும். ஒரு மிகப் பெரிய நாடு கடத்தும் திட்டத்தை வடிவமைத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow