ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்று வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்

பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது

Apr 11, 2025 - 08:10
 0  4
ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்று வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்

பிரசல்ஸ்: பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன் நேற்று கூறிய​தாவது:

அமெரிக்க அதிபர் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​ததற்கு இணை​யாக நாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கைகள் எடுப்​பதை ஒத்​திவைக்க முடிவு செய்​துள்​ளோம். அதன்​படி, 20.9 பில்​லியன் யூரோக்​கள் (23 பில்​லியன் டாலர்) அமெரிக்​கப் பொருட்​களின் மீதான புதிய வரி​கள் 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது. ஏனெனில், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்​பு​கிறோம். இந்த பேச்​சு​வார்த்​தைகள் திருப்​தி​கர​மாக இல்லை என்​றார், எங்​கள் எதிர் நடவடிக்​கைகள் தொடங்​கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow