டெல்லியில் புரோ கபடி பிளே ஆஃப் சுற்றுகள்

புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Oct 11, 2025 - 09:55
 0  4
டெல்லியில் புரோ கபடி பிளே ஆஃப் சுற்றுகள்

புதுடெல்லி: புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடைசிகட்ட லீக் போட்டிகள் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் ஆடடங்கள் மற்றும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow