டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் சிஎஸ்கே - ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பிளே ஆஃப்சுற்​றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்​கெனவே இழந்​து​விட்ட சென்னை சூப்​பர் கிங்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

May 20, 2025 - 08:20
 0  2
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் சிஎஸ்கே - ராஜஸ்தான் இன்று மோதல்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பிளே ஆஃப்சுற்​றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்​கெனவே இழந்​து​விட்ட சென்னை சூப்​பர் கிங்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

தோனி தலை​மையி​லான சிஎஸ்கே அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 9 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களை பெற்று 10 அணி​கள் கலந்து கொண்​டுள்ள தொடரில் கடைசி இடத்​தில் உள்​ளது. சஞ்சு சாம்​சன் தலை​மையி​லான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 13 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 10 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில் உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow