‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

Jun 29, 2025 - 23:00
 0  4
‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இதில் பிரதீப் ரங்கநாதன், “இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், 'இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?' என கேட்டார். அதற்கு நான் 'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow