டிச.25-ல் விக்ரம் பிரபுவின் ‘சிறை’ ரிலீஸ்!

விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் படங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார்.

Oct 11, 2025 - 12:05
 0  2
டிச.25-ல் விக்ரம் பிரபுவின் ‘சிறை’ ரிலீஸ்!

விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் படங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே.அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தை, வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், தான் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரிக்கும் விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் படத்தின் மையம். இதன் கதை சிவகங்கை பின்னணியில் நடக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow