டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி!

அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஐக்கிய அரபு அமீரக அணி தகுதி பெற்றுள்ளது. 

Oct 17, 2025 - 01:05
 0  3
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி!

சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஐக்கிய அரபு அமீரக அணி தகுதி பெற்றுள்ளது.

வியாழக்கிழமை அன்று ஓமனில் நடைபெற்ற ஆசியா / கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றின் ‘சூப்பர்-6’ போட்டியில் ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி. இதன் மூலம் இந்த பிரிவில் நேபாளம் மற்றும் ஓமன் அணியை தொடர்ந்து மூன்றாவது அணியாக ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow