ஜோஜு ஜார்ஜின் ‘பனி’ படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு! 

ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பனி’ படத்தை பார்த்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

Nov 21, 2024 - 18:10
 0  6
ஜோஜு ஜார்ஜின் ‘பனி’ படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு! 

சென்னை: ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பனி’ படத்தை பார்த்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘பனி’. இந்தப் படம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி கேரளாவில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சாகர் சூர்யா, அபிநயா, அனூப் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ், சந்தோஷ் நாராயணன், விஷ்ணு விஜய் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படம் மொத்தமாக ரூ.20 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow