ஜேஎஸ்கே டி20 கிரிக்கெட் தொடர்: செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே அணிகள் மோதின.

Jan 24, 2025 - 08:35
 0  2
ஜேஎஸ்கே டி20 கிரிக்கெட் தொடர்: செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன்

திருநெல்வேலி: ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே அணிகள் மோதின. திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.

ஜோஷ் ஷேன் பிரான்சிஸ் 97, ராகவ் 75 ரன்கள் விளாசினர். 221 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக டிஎம் மிதுன் 59 ரன்கள் சேர்த்தார். 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow