ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: சூர்யவன்ஷியை சமாளிக்குமா மும்பை?

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

May 1, 2025 - 06:55
 0  5
ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: சூர்யவன்ஷியை சமாளிக்குமா மும்பை?

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளுடனே லீக் சுற்றை நிறைவு செய்ய முடியும். இது நிகழ்ந்தாலும் ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே அமையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow