ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆவின் நெய், பனீர் விலை குறைப்பு

தற்​போது ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு காரண​மாக​வும், பண்​டிகை கால சலுகை​யாக​வும் ஆவினில் அனைத்து வகை​யான நெய்​களுக்​கும் லிட்​டருக்கு ரூ.40 விலை குறைந்​துள்​ளது.

Sep 23, 2025 - 06:05
 0  21
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆவின் நெய், பனீர் விலை குறைப்பு

சென்னை: ஜிஎஸ்டி குறைப்​பால், ஆவின் பால் பொருட்​களான நெய், பனீர் விலை குறைந்​துள்​ளது. ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் யுஎச்டி பால் மற்​றும் பனீர் வகைகளுக்கு விலக்கு அளிக்​க​வும் நெய், வெண்​ணெய், பாலாடை உள்​ளிட்ட பால் பொருட்​கள், ஐஸ்​கிரீம் வகைகள் ஆகிய​வற்​றுக்கான வரி 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த குறைப்பு நேற்று அமலுக்கு வந்​தது.

இதுகுறித்​து, ஆவின் நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “தற்​போது ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு காரண​மாக​வும், பண்​டிகை கால சலுகை​யாக​வும் ஆவினில் அனைத்து வகை​யான நெய்​களுக்​கும் லிட்​டருக்கு ரூ.40 விலை குறைந்​துள்​ளது. ரூ.120-க்கு விற்​கப்​பட்ட 200 கிராம் பனீர் ரூ.110-க்​கும் வெண்​ணெய் விலை ரூ.50 வரை​யும் குறைந்​துள்​ளது” என கூறப்பட்டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow