‘ஜனநாயகன்’ சம்பளம்: இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட விஜய்?

இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’.

Jun 26, 2025 - 19:10
 0  3
‘ஜனநாயகன்’ சம்பளம்: இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட விஜய்?

இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், ஜி.எஸ்.டி தொகையும் இணையும் என்பது கூடுதல் தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow