சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்த ஐசிஐசிஐ வங்கி!

நகர பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கை தொடங்கினால் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையாக ரூ.50,000-ஐ கணக்கில் வைக்க வேண்டும் என அண்மையில் அறிவித்தது தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி. 

Aug 13, 2025 - 22:55
 0  3
சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸை ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைத்த ஐசிஐசிஐ வங்கி!

மும்பை: நகர பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கை தொடங்கினால் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையாக ரூ.50,000-ஐ கணக்கில் வைக்க வேண்டும் என அண்மையில் அறிவித்தது தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி.

இதற்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பும், அழுத்தமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அதை மாற்றி அறிவித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி. அதன்படி ரூ.50,000 என இருந்த குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.10,000 என இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow