செஸ் சாம்பியன் ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Dec 30, 2024 - 09:50
 0  3
செஸ் சாம்பியன் ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கோனேரு ஹம்பி 8.5 புள்ளிகள் பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். உலக ரேபிட் செஸ் போட்டியில் ஹம்பி வெல்லும் 2-வது பட்டமாகும் இது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow