செப்.12-ல் 10 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகமான திரைப் படங்கள் வெளியாகி வருகின்றன.

Sep 8, 2025 - 07:45
 0  3
செப்.12-ல் 10 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகமான திரைப் படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது. ஆக.14-ல் மெகா பட்ஜெட்டில் உருவான ரஜினியின் 'கூலி' வெளியானதால், அதற்கு முந்தைய வாரமும் அடுத்தடுத்த வாரங்களிலும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் செப்.12-ம் தேதி 10 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம், குமாரசம்பவம், தணல், காயல், அந்த 7 நாட்கள், யோலோ, மதுரை 18, உருட்டு உருட்டு, தாவுத் ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதில், கடைசி நேரத்தில் சில படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow