செப். 9ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்?: சிஇஓ டிம் குக்கின் சூசக தகவல்

எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Aug 27, 2025 - 16:30
 0  2
செப். 9ல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்?: சிஇஓ டிம் குக்கின் சூசக தகவல்

நியூயார்க்: எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow