சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிப்.17-ல் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்துடன் இணைந்து 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் தமிழ்நாடு டிரையாத்லான் சங்கத்துடன் இணைந்து எஸ்டிஏடி ஆசிய டிரையாத்லான் கோப்பை போட்டிகளை நடத்தவுள்ளது.

Jan 29, 2025 - 09:20
 0  6
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிப்.17-ல் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்துடன் இணைந்து 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் தமிழ்நாடு டிரையாத்லான் சங்கத்துடன் இணைந்து எஸ்டிஏடி ஆசிய டிரையாத்லான் கோப்பை போட்டிகளை நடத்தவுள்ளது.

23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் வரும் பிப்ரவரி 17 முதல் 20 வரை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். பாராலிம்பிக்கில் 3 பதக்கம் வென்றுள்ள உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், ஈட்டி எறிதலில் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ள சுமித் அன்டில், நவ்தீப் சிங் உள்ளிட்ட பிரபல வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow