சென்னை ‘உதயம்’ திரையரங்கம் நிரந்தரமாக மூடல்
சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. அங்கு, திரையரங்க கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு வரவுள்ளது.

சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. அங்கு, திரையரங்க கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு வரவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உதயம் திரையரங்குகள் செயல்படாதது, அதற்கு அருகில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் பெரும் சோகத்தை உருவாக்கி இருக்கிறது.
1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்டிருந்தது. பின்னாட்களில் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் திரையரங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு, மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது.
What's Your Reaction?