சூர்யா சேதுபதியின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து பாராட்டியுள்ளார். 

Jul 4, 2025 - 00:25
 0  3
சூர்யா சேதுபதியின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பார்த்து பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் - ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் 14-ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை (ஜூலை 4) ரிலீஸ் ஆகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow